போச்சம்பள்ளி அருகே ஸ்டாலின் முகாமில் பிரதமர் புகை படம் இல்லை பாஜவினர் புகார் மனு
போச்சம்பள்ளி அருகே ஸ்டாலின் முகாமில் பிரதமர் புகை படம் இல்லை பாஜவினர் புகார் மனு;
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி, மருதேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இந்த முகாமில் மருதேரி ஊராட்சி மற்றும் குடிமியானஹள்ளி ஊராட் சிகளுக்கு உட்பட்ட 20க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் அதிகமான மக்கள் மனுக்கள் வழங்கினர். இதில் அரசு தொடர்புடைய முகாமில் பிரதமரின் படம் இடம் பெறவில்லை என்று பாஜ முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் உட்பட சிலர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனிடம் மனு அளித்தனர். அவர் மனுவை மேலிடத்துக்கு அனுப்புவதாக சரவணன் தெரிவித்தார்.