செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுப்பாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நந்தியம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.