திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-07-23 09:28 GMT
மதுராந்தகத்தில் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராமல் இருந்து வரும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராமல் மெத்தனப்போக்கில் இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மதுராந்தகம் நகரக் கழக செயலாளர் பூக்கடை கே. சி.சரவணன், ஏற்பாட்டில், மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள M. தனபால், ஆகியோர் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டனை உரையாற்ற முன்னாள் அமைச்சர் பா. பெஞ்சமின் அவர்கள் கலந்துகொண்டு மதுராந்தகம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு கழகக் கொடிகளை ஏந்தியவாறு கண்டன முழக்கமிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது மதுராந்தகம் நகராட்சியில் நிலவிவரும் பல்வேறு நிர்வாக சீர் கேட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மதுராந்தகம் நகராட்சியில் வாழும் மக்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகின்றது குடிநீர் பிரச்சினையை குடிநீர் குழாய் மற்றும் கிணறு அமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனால் மக்கள் குடிநீருக்கு அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குப்பை அல்லது தனியாரிடம் டெண்டர் விடப்பட்டுள்ளது அவர்கள் நான்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்றுகின்றனர் இதனால் சுகாதார ஏற்பட்டுள்ளது மக்களுக்கு போதிய வசதிகளை செய்து தராத நிலையில் சொத்து வரி வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை கடுமையாக உயர்த்தி உள்ளது. நகராட்சியில் அள்ளப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையினாலும் கழிவுநீர் கால்வாய் சரியாக பராமரிக்காத காரணத்தினாலும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நகர் நல மையத்தில் உயிர்காக்கும் கருவி மற்றும் மருந்துகள் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருகின்றது. இது போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராமல் மெத்தன போக்கோடு இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மக்களின் தேவையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழக மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆணுர் பக்தவச்சலம், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன்,உள்ளிட்ட முக்கிய சார்பு அணிகளின் நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய நகர பேரூராட்சி கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News