கல்வராயன்மலையில்: கலெக்டர் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-07-24 04:31 GMT
கல்வராயன்மலையில் வன உரிமைச் சான்று வழங்குவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் வாழும் மலைவாழ் மக்கள், வன உரிமை சான்று வேண்டி மனு தாக்கல் செய்திருந்தனர்.இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அரசு அதிகாரிகள் கடந்த 10 மாதங்களில், 3071 நபர்களுக்கு வன உரிமைச் சான்று வழங்கினர். மேலும் விண்ணப்பித்திருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இது வரை வன உரிமைச் சான்று வழங்கப்படவில்லை. இந்நிலையில் நிலுவையில் உள்ள நபர்களுக்கு வன உரிமைச் சான்று விரைந்து வழங்குவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

Similar News