நாட்றம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நாட்றம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;

Update: 2025-07-24 06:17 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு கணவனை கைது செய்த நாட்றம்பள்ளி போலீசார் சிறையில் அடைத்தனர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அண்ணாதெரு பகுதியில் சேர்ந்தவர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி மல்லிகா தம்பதியினர் இருவரும் பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர் திருமணம் ஆகி 15 வருடம் ஆன நிலையில் இரண்டு ஆண் குழந்தை உள்ளன இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த மாதம் 10-07-2025 அன்று இருவரும் சண்டை போட்டு வந்த நிலையில் மாலை திடீரென மல்லிகா வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு அருகே உள்ள நிலத்தில் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டுள்ளார் இதனால் உடல் முழுவதும் பரவிய தீ மல மல வென பற்றி எறிய தொடங்கியது அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து மல்லிகாவை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நாட்றம்பள்ளி காவல் துறையினர்க்கு தகவல் கொடுத்து நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுமதித்த நிலையில் 12 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நாட்றம்பள்ளி போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து மல்லிகாவின் கணவன் ரமேஷை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தன்னைத் தானே எரித்துக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Similar News