வீரஆஞ்சநேயர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு
அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு;
திண்டுக்கல், நிலக்கோட்டை, வைகை ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கும் அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பரிகார ஸ்தலம் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்துள்ளனர். கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்து மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர். நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.