ஊதியூர் அருகே மதுவிற்ற முதியவர் கைது
ஊதியூர் அருகே மதுவிற்ற முதியவர் கைது மது பாட்டில்கள் பறிமுதல்;
ஊதியூர் அருகே மேட்டுப்பாறை சாலையில் முதலிபாளையம், வஞ்சிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மது விற் பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊதியூர் போலீசார், மேட்டுப்பாறை டாஸ் மாக் கடை பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்த மருதுறையான் வலசு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 65) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.