ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்...

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்...;

Update: 2025-07-24 14:24 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷத்தினங்கள் மற்றும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முதலாம் ஆண்டாக சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோயில் பூசாரிகள் செய்திருந்தனர்.

Similar News