ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு ஊருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையில் இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை...
ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு ஊருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையில் இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை...;
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல் வடக்கு, ராசிபுரம் பகுதி அலுவலகத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியான ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு என்ற பகுதியில் தனியார் பேருந்துகள் ஊருக்குள் வராமல் புறவழிச் சாலையில் மேம்பாலம் வழியாக செல்வதாக பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாரையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் E.S முருகேசன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் A.செல்வகுமார் அவர்கள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டதில் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு பஸ் நிறுத்தத்திற்கு ஊருக்குள் வராமல் புறவழிச் சாலையில் மேம்பாலம் வழியாக இயக்கப்பட்ட மூன்று தனியார் பேருந்துகள் மீது சோதனை அறிக்கை வழங்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது, மேலும் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு பேருந்து நிறுத்தம் சென்று இயக்கப்பட வேண்டும் என அனைத்து தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சிறப்பு வாகனத் தணிக்கை இனிவரும் காலங்களில் அடிக்கடி நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் EV முருகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.