தொடர்ந்து திருட்டு சம்பவத்தால் விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் வேதனை..
தொடர்ந்து திருட்டு சம்பவத்தால் விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் வேதனை..;
திருப்பத்தூரில் விவசாயிகள் குறைத்தேர்வு கூட்டத்தில் நிலத்தில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் மாற்றி உள்ள காப்பர் வயர்கள் தொடர்ந்து திருட்டு சம்பவத்தால் விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் வேதனை.. நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை குறித்து பேசினர். அப்போது விவசாயி ஒருவர் கூறுகையில் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு சமூக விரோதிகள் அரசுக்கு சொந்தமான உயர் மின்மார்றியை உடைத்து அதில் உள்ள காப்பர் கம்பிகளை திருடி சென்றுவிட்டனர். இதனால் இரண்டு நாளாக மின்சாரம் இல்லாமல் விவசாய பயிர்கள் காய்ந்து சேதமானது, அதுமட்டுமின்றி விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் ஒயர், உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வருகின்றனர், அரசுக்கு சொந்தமான மின் மாற்றியை திருடிசென்றனர் ஆனால் அரசு வாங்கிவிடும் எங்களை போல விவசாயிகள் எப்படி வாங்கமுடியும் இதேபோன்று சூழல் நீடித்தால் விவசாயிகள் இரவு நேரத்தில் கிணற்றில் உள்ள மின் மோட்டார், மின் ஒயர், உள்ளிட்டவைகளை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லும் அவல நிலை உருவாக கூடாது உடனடியாக தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தனர், மேலும் சிறு குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு பராமரிப்பு செலவிற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய வங்கி கடனை திருப்பி செலுத்தி விட்டு மீண்டும் கடன் வழங்க கேட்டாள் சிபில்ஸ் கோர், மற்றும் புது புதிய ஆவணங்களை கேட்டு கடன் வழங்க தட்டி கழித்து வருகின்றனர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மின்னல் வேகத்தில் தென்னை மரங்களை தாக்கி வரும் கருந்தலை விஷா பூச்சி மிகவும் வேகமாக பரவி தென்னை மரத்தை சீரழித்து வருகின்றது பரவுவதை தடுக்காவிட்டால் அருகில் உள்ள செடி கொடி மரம் உள்ளீட்டுவைகளை தாக்கி வேகமாக பரவி அழித்துவிடும் நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தனர் அதேபோன்று கிராம பகுதிகளில் இயங்கி வரும் நியாயவிலை கடையில் முறையான உணவு பொருட்களை வழங்குவதில்லை பகுதி நேர கடையை முழு நேர கடையை மாற்றவேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர் இறுதியாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த சிறுதானிய உணவு தின்பண்டங்கள் செய்து ஆட்சியர்க்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை, வனத்துறை, மின்சார துறை தீயனைப்பு துறை, உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்