நின்று கொண்டிருந்த பெண்களை கண்ட சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதால் பரபரப்பு

நின்று கொண்டிருந்த பெண்களை கண்ட சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதால் பரபரப்பு;

Update: 2025-07-25 09:41 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் ஆதார் கார்டு எடுப்பதற்காக குழந்தைகளுடன் நாற்காலி இல்லாமல் நின்று கொண்டிருந்த பெண்களை கண்ட சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த வெளக்கல் நத்தம் ஊராட்சி பகுதியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரவர் தங்களுடைய பிரச்சனைகள் குறித்த புகார்களை 45 நாட்களுக்குள் விடிவு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் கொடுக்க வந்திருந்தனர். அப்போது கை குழந்தைகளுடன் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆதார் கார்டு எடுக்கும் இடத்தில் உட்கார நாற்காலி இல்லாமல் கூட்டமாக நின்று ஒருவர் மீது ஒருவர் முந்திக் கொள்ளும் வகையில் நின்றதாலும் ஒரு சில இடங்களில் நாற்காலி இல்லாமல் சிறுவர்கள் கைக்குழந்தைகள் தரையில் அமர்ந்து இருந்ததாலும் அப்போது அங்கு மேற்பார்வையிட வந்த சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கைக்குழந்தைகளுடன் காத்திருக்கும் இந்த பெண்களுக்கு ஒரு நாற்காலி கூட ஏற்பாடு செய்ய உங்களால் முடியாதா அதிகாரிகள் எல்லாம் என்ன கடமைக்காக வேலை செய்கிறீர்களா என்று கடிந்து கொண்ட பிறகு எங்கோ இருந்த நாற்காலிகளை உடனுக்குடன் எடுத்து வந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் போட்டு கை குழந்தைகளுடன் இருந்த பெண்களை அமர வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பல துறை சார்ந்த முகாம் மேசை அருகில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் இன்று நடைபெற்ற முகாமில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்ட பட்டா வழங்குதல் நில பிரச்சனை மற்றும் ஒரு சில சான்றிதழ்கள் வழங்கப்பட்டவர்களுக்கு அதனை அங்கேயே வழங்கி வாழ்த்து கூறி சென்றார்.

Similar News