வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்;
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 14 விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய பவர் டில்லர்களை,நுண்ணுயிர் பாசனத்திற்கான பணி ஆணை மற்றும் விதைகள், செடிகள், உளித்த நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்,செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்குளத்தூர் ஊராட்சி குழுத்தலைவர் உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், இணை இயக்குநர் (வேளாண்மை) பிரேம் சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் அமீது. மண்டல முதுநிலை மேலாளர் ரேணுகாம்பாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அருள் போஸ்கோ. உதவி செயற்பொறியாளர்கள் ரமேஷ், பிரின்ஸ் முத்து ராஜ்,செங்கல்பட்டு நகரச் செயலாளர் ச. நரேந்திரன்,காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள்,மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.