கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத சூழல்

கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத சூழல்;

Update: 2025-07-25 11:11 GMT
செய்யூர் கடலோரப் பகுதிகளில் கடலின் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது! செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலை ஓரமாக உள்ள தழுதாலிகுப்பம், பனையூர் பெரியகுப்பம், கடப்பாக்கம் குப்பம், ஆலம்பரை குப்பம், முதலியார் குப்பம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக ஆள் உயர அளவில் கடல் சிற்றம் ஏற்பட்டுள்ளது இதனால் கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. கடல் அலை முன்னோக்கி அதிக அளவில் வந்து செல்வதால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். கடலில் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இன்று காலை முதல் காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் மீன்பிடி வலைகளையும், படகுகளையும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News