உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஆய்வு செய்த அமைச்சர்
உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஆய்வு செய்த அமைச்சர்;
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் 12, 13, மற்றும் 15 வது வார்டு பொதுமக்களுக்காக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 13 துறைகள் சார்பில் 43 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.இந்த முகாமினை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், நகர்மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன்,மறைமலை நகர் தெற்கு நகரச் செயலாளர் வினோத்குமார், பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து, வீட்டு வரி பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், குடும்ப அட்டை பெயர் மாற்றம், மகளிர் உரிமைத்தொகை, உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான ஆவண சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர், வட்டாட்சியர், நகர்மன்ற உறுப்பினர்கள், துறைச் சார்ந்த அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.