தேசிய அளவிலான நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ராசிபுரத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு...
தேசிய அளவிலான நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ராசிபுரத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு...;
தேசிய அளவிலான நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ராசிபுரத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு.. அரசு பள்ளிகளிலும் சிலம்ப பயிற்சி நடத்த வேண்டும் என வெற்றி பெற்ற வீரர்கள் கோரிக்கை.... டெல்லியில் கடந்த ஜூலை 21 &22ஆம் தேதி தல்கதோரா உள்விளையாட்டு அரங்கத்தில் தேசிய அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான சிலம்ப போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 6 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் தொடும் முறை,ஒற்றைக்கம்பு கம்பு, சண்டை என பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு 3 தங்கப்பதக்கத்தையும், 1 வெள்ளி பதக்கத்தையும், 2 வெண்கல பதக்கத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.இந்த நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெற்றோர்கள் மாலை அணிவித்தும் இனிப்புகள் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர்கள் கூறுகையில் தான் அரசு பள்ளியில் படித்து வந்ததாகவும் அங்கு சிலம்ப போட்டிக்கான பயிற்சிகள் இல்லாததால் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றதாகவும் அதன் பிறகு தற்போது நான் தங்கப்பதக்கம் பெற்றதாக கூறினார். இதுபோன்று அரசு பள்ளிகளிலும் சிலம்பத்திற்கான பயிற்சியாளர்கள் அமைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் சிலம்பப் போட்டிக்கு செல்வதற்கு போதிய வசதி இல்லாததால் தமிழக அரசு தங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தற்போது வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்து சர்வதேச அளவிலான நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது...