கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்த குடிபோதை ஆசாமி

குடும்பத்த தகராறு காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்த குடி போதை ஆசாமி;

Update: 2025-07-25 15:07 GMT
சித்தாமூர் அருகே வால்காடு கிராமத்தை சேர்ந்த குடிபோதை ஆசாமி குடும்பத்த தகராறு காரணமாக தொடை அளவு தண்ணீர் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே உள்ள வால்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை வயது (32) இவருக்கும் ஜெயரவி வயது (30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன இதனால் தம்பி துறைக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு இருந்துள்ளது இதனாலும் தம்பிதுரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை சச்சரவு இருந்துள்ளது இதனை அடுத்து நேற்று அதிக மது போதையில் இருந்த தம்பிதுரை மற்றும் அவரது மனைவி கிடையே தகராறு முற்றிய நிலையில் தற்கொலை செய்து கொள்ள போவதாக தம்பிதுரை 60 அடி ஆழ விவசாய கிணற்றில் குதித்து உள்ளார் ஆனால் அந்த கிணற்றில் தொடை அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது அவருக்கு தெரியாத நிலையில் கிணற்றில் இருந்து மேலே வர முடியாமல் தன்னைக் காப்பாற்றும் படி கத்தியுள்ளார் இதனை அடுத்து அங்கு வந்த அக்கம் பக்க விவசாய நிலங்களில் இருந்த நபர்கள் சித்தாமூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அருகிலுள்ள அச்சரப்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த அச்சரப்பாக்கம் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி கிணற்றில் மது போதையில் அலறிக் கொண்டிருந்த தம்பிதுரையை கயிறு மூலம் அவரைத் கட்டி மேலே இழுத்து அவரைக் காப்பாற்றினர்.

Similar News