பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் பிறந்தநாள் நிர்வாகிகள் கொண்டாட்டம்...
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் பிறந்தநாள் நிர்வாகிகள் கொண்டாட்டம்...;
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களின் 87 வது பிறந்தநாள் விழாவை ஒருங்கிணைந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஸ்டீல் சதாசிவம், சேலம் தென் மண்டல பொறுப்பாளர் கரூர் பாஸ்கர் அவர்களின் ஆணைக்கிணங்க பிறந்தநாள் விழா நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் கேக் வெட்டி இனிப்பு லட்டுகள், பொதுமக்கள், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது . நகரம் சார்பாக நகரச் செயலாளர் கு. கந்தசாமி அவர்களின் தலைமையில் நகரத் தலைவர் பூக்கடை கி. மாது முன்னிலை நகரப் பொருளாளர் வசந்தி ஆகியோர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அரிமா ஆ. மோகன்ராஜ் , மாவட்டத் தலைவர் பொன். முருகேசன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் திருப்பதி, மங்களபுரம் மாவட்டத் துணைச் செயலாளர் பேட்டரி கணேச பாண்டியன், மற்றும் மூத்த முன்னோடிகள் கட்டநாச்சம்பட்டி கணேசன், மாரியப்பன், பழனிச்சாமி, மாவட்ட ஊடகப் பேரவை செயலாளர் வன்னியரசு,மாவட்ட இளைஞரணி செயலாளர் மா. கௌதமன்,மாவட்ட சிறுபான்மை தலைவர் பாட்ஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழக்கடை இளங்கோ, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வ. மாணிக்கம், நகரத் துணைச் செயலாளர் ஏ. ஆர். எஸ் ஸ்டுடியோ குமார், நகர வன்னியர் சங்க செயலாளர் கே. கே. மாரிமுத்து, நகர மாணவரணி செயலாளர் ரா. மனோஜ்,நகர ஆட்டோ சங்கர் தலைவர் மா. தமிழ் சக்கரவர்த்தி, முன்னாள் நிர்வாகிகள் கொளத்தூர் குமார், பூக்கடை கார்த்தி, வரதராஜ்,கோகுல் விஜய் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.