மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பள்ளி செல்லும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேச்சு..

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பள்ளி செல்லும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேச்சு..;

Update: 2025-07-26 13:48 GMT
கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் தமிழக முதல்வர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் எடப்பாடி அவர்களின் ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட் காமராஜ் சிலை அருகில் தமிழகத்தை நாசமாக்கிய நிர்வாக திறனற்ற திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் குமாரபாளையம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி கழக மகளிர் அணி இணைச் செயலாளரும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் சரோஜா கழக இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விபிபீ பரமசிவம், கபிலமலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் பரமத்தி வேலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான பொறியாளர் எஸ். சேகர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அக்கரைப்பட்டி எம். கண்ணன் இந்த கண்டன பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த கண்டனக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசியதாவது இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் இந்த ஆட்சி அவல நிலைகளை தெளிவாக எடுத்துரைத்தார். மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சியிலும் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியிலும் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கினார்கள் ஆனால் திமுகவினர் கள்ள சாராயத்தை கொடுத்து முதன்முறையாக விழுப்புரத்தில் முதன் முதலாக 23 பேர் மரணம் அடைந்தனர். இந்த அரசு கள்ள சாராயத்துக்கு ஆதரவாக இருப்பதால் கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் முன் காலை முதல் மாலை வரை வெயிலில் அலைந்து உழைப்பவர்கள் ஒரு விபத்தில் இறந்து விட்டால் அவர்களுக்கு ஒரு லட்சமும் கொடுக்கிறார்கள் இது எந்த விதத்தில் நியாயம். நீங்கள் அதே போல் தொழிலாளிகள் இறந்தாலும் ரூபாய் 10 லட்சம் கொடுக்கலாம் அல்லவா. ஆக இந்த அரசு போதை பொருள் விற்பவர்களுக்கும், கள்ள சாராயம் விற்பவர்களுக்கும் ஆதரவாக இருக்கிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் நமது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். பிஞ்சு குழந்தைகள் எல்லாம் கற்பழிக்கப்படும் நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது இந்த திமுக அரசு தேவையா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தான் தாலிக்கு தங்கம் என்கின்ற திட்டத்தை கொண்டு வந்து பத்தாண்டு காலத்தில் 13 லட்சம் பேருக்கு அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்கள் இப்பொழுது அம்மா அவர்கள் கொண்டு வந்த என்ற காரணத்திற்காக அந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் கேட்டால் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால் கல்லூரியில் படிப்பவர்களுக்கு நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றோம். ஆகையால் இந்த திட்டம் தேவையில்லை என்று சொல்கிறார்கள். அதேபோல லேப்டாப் திட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்தில் 52 லட்சம் மாணவ மாணவிகளுக்கு 15000 மதிப்புள்ள லேப்டாப்பை கொடுத்தார்கள் அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள் என்ற காரணத்திற்காக ஏழை மாணவர்கள் எல்லாம் கல்லூரியில் சேர வேண்டும் என்று சொன்னால் இன்றைய கம்ப்யூட்டர் வளர்ந்து கொண்டிருக்கின்ற காலம் கம்ப்யூட்டர் அறிவு இல்லை என்று சொன்னால் மேற்படிப்பு படிக்க முடியாது என்ற காரணத்திற்காக அந்த லேப்டாப் என்பது மிக முக்கியம் அதை நான் தருகிறேன் என்று அம்மா அவர்கள் ஆரம்பித்து அண்ணன் எடப்பாடியார் 52 லட்சம் பேருக்கு கொடுத்தார்கள் இந்த நான்கு ஆண்டு காலமாக அந்த லேப்டாப் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். கேட்டால் அதற்கு ஏதோ ஒரு பதிலை சொல்லி விடுகிறார்கள்.எங்கேயும் சட்ட ஒழுங்கு கெடவில்லை தினந்தோறும் 10 கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாலியல் தொல்லை என்பது இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை. காரணம் ஆசிரியர்களே கற்பை சூறையாடுகின்ற ஆட்சி தான் திமுக ஆட்சி அப்படி இருக்கின்ற பொழுது எப்படி பெண்களை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியும் எப்படி பாதுகாப்பு இருக்கும் இந்த நான்காண்டு காலமாக எத்தனை மாணவிகளின் கற்பு சூறையாடப்பட்டிருக்கிறது. எத்தனை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அம்மா அவர்கள் இருக்கின்ற பொழுதும் எடப்பாடியார் இருக்கின்ற பொழுதும் இது போன்ற ஒரு சூழ்நிலை இருந்ததா பயம் இருந்தது ஆட்சியாளர்கள் மீது அவர்களுக்கு பயம் இருந்தது ஏதாவது தவறு செய்தால் நடவடிக்கை எடுத்து விடுவோம் என்று இன்றைய ஆட்சியாளர்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லாத காரணத்தினால் தான் தொடர்ந்து இப்படி தவறுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று கஞ்சா என்பது ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவன் பாக்கெட்டில் கஞ்சா பாக்கெட் இருக்கின்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகி விட்டது. வெண்ணந்தூரில் 100 தரி பட்டறைகள் இருக்கின்றது நமது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பட்டறை வைத்துள்ளார் நன்றாக நினைத்துக் கொள்ளுங்கள் நம்முடைய இயக்கத்தினர் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய கழகத்தினரின் தறிப்பட்டறைக்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்று ஆகையால் அந்த பட்டறையை மூட வேண்டும் அதிகாரிகளும் மின் துறை அதிகாரிகளும் அங்கே வந்து பட்டறையை மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த குடும்பத்தினர் போராடுகின்றார்கள் நீங்கள் ஏதாவது செய்தால் நாங்கள் தீக்குளித்து விடுவோம் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் தறிப்பட்டறைகள் இயங்கிக் கொண்டிருக்கிறது வெண்ணந்தூரில் 100 பட்டறைகள் இருக்கின்றது. அவரின் ஒரு பட்டறை மட்டும் தான் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்குகின்றதா மற்ற அனைத்து பட்டறைகளும் அனுமதியுடன் தான் இயங்குகின்றதா வெண்ணந்தூரில் இருக்கும் அனைவரும் நினைத்துக் கொள்ளுங்கள் இன்று ஏதோ அண்ணா திமுக என்பதற்காக அந்த பட்டறையை நாளைய தினம் மூடி விட்டார்கள் என்று சொன்னால் அதே காரணத்திற்காக அனைத்து பட்டறைகளையும் மூடி விடுவார்கள் தொழிலே இல்லாமல் போய்விடும் என்பதை மட்டும் நீங்கள் மறந்து விடாதீர்கள். திமுகவிற்கு வாக்களித்த வெண்ணந்தூர் மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் சரி நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி அதிகமாக திமுகவிற்கு தான் வாக்களித்து உள்ளீர்கள். அதற்கு பரிசாக தான் அந்த மக்களுக்கு இன்றைய தினம் உதாரணத்திற்கு ஒரு பட்டறையை மூடுகிறோம் என்று சொல்கிறார்கள் இந்த பட்டறை மூடினால் இதை வைத்து வேறு ஒருவர் வழக்கை தொடுப்பார் அப்படி வழக்கைத் தொடுக்கின்ற பொழுது எல்லா பட்டறையும் மூடுங்கள் என்று கூறுவார்கள் ஏற்கனவே இலவச வேட்டி சேலை என்கின்ற திட்டத்தையே இந்த நான்காண்டு காலம் மூடிவிட்டீர்கள். வெண்ணந்தூர் பகுதியை பொறுத்தவரை முழுக்க முழுக்க விசைத்தறிகள் நிறைந்த பகுதி. 2003 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் விசைத்தறியில் இலவச வேட்டி சேலை ஒட்டிக் கொள்ளலாம் என்று கூறியதால் வருடம் முழுவதும் பாதி இலவச வேட்டி சேலைகள் ஓட்டிக் கொண்டனர் விசைத்தறியாளர்களுக்கு வருடம் முழுவதும் வேலை இருந்து கொண்டு இருந்தது. திமுக ஆட்சி வருவதற்கு முன்பு வரை இந்நிலை நீடித்தது. அதனால் விசைத்தறி முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வருடம் முழுவதும் வேலை கிடைத்தது. இந்த நான்காண்டு காலத்தில் எங்கள் எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டத்தை நீங்கள் முடக்க பார்க்கிறீர்கள். ஆனால் இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்தது போல் கணக்கு காட்டுகிறீர்கள். நான் பலமுறை சட்டமன்றத்தில் பேசிய பொழுது துறை அமைச்சர் செவி கொடுத்து கேட்கவில்லை அப்படி கேட்டிருந்தால் இன்று இன்று வருடம் முழுவதும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்திருக்கும் வருமானம் வந்திருக்கும் வருமானம் இல்லாத காரணத்தினால் தான் இந்த தொழிலாளர்கள் ரூபாய் 4 லட்சத்திற்கு தனது கிட்னியை விற்பனை செய்கின்றனர். இந்த ஆட்சி எப்பொழுது போகும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் தான் அண்ணன் அவர்கள் செல்லும் இடமெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ்.பி கந்தசாமி, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீ தேவி பி.எஸ். மோகன், வெண்ணந்தூர் பேரூர் கழக செயலாளர் செல்வம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராஜா, தாமோதரன், நாமக்கல் மாவட்ட பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் வழக்கறிஞருமான கே.பி. எஸ் சுரேஷ்குமார், இராசிபுரம் நகரக் கழக செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் மாநகர எம். பாலசுப்பிரமணியம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான முரளி பாலுசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் என். பொன்னுசாமி, மாவட்ட கலை பிரிவு செயலாளர் எம். சிங்காரவேலு, பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராதா சந்திரசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் என்.கே தினகர், நன்றியுரை மாவட்ட இணை செயலாளர் இளைஞர் பாசறை ஜெயம் எஸ். பவித்ரன் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News