வாணியம்பாடியில் க்யூ ஆர் கோட் மூலம் டிஜிட்டலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்

வாணியம்பாடியில் க்யூ ஆர் கோட் மூலம் டிஜிட்டலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்;

Update: 2025-07-26 15:13 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் க்யூ ஆர் கோட் மூலம் டிஜிட்டலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் கியூ ஆர் கோட் அட்டையை கையில் வைத்துக்கொண்டு டிஜிட்டல் முறையில் யாசகம் எடுக்கும் நபர் பார்ப்போர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கியூ ஆர் கோட் அட்டையை கையில் வைத்துக்கொண்டு டிஜிட்டல் முறையில் யாசகம் எடுத்து வந்துள்ளார் .இதனை கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர் அப்போது தற்போது டிஜிட்டல் மூலமே அனைத்து பரிவர்த்தனையும் நடப்பதால் செல்போன் மூலமும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன பர்ஸில் பணம் வைத்துக் கொள்வது என்பதே தற்போது அரிதாக உள்ளதாக தெரிவித்த அவர் 3 ஏடிஎம் கார்டுகள் இருப்பதாகவும் இதற்கான க்யூ ஆர் கோட் அனுமதியை பெற்று தனது கையில் அந்த அட்டையை வைத்துக்கொண்டு டிஜிட்டல் முறையில் அவர் பிச்சை எடுக்கிறார். மேலும் அவருக்கு டிஜிட்டல் முறையிலேயே பலர் பணம் போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது வருங்காலத்தில் பல யாசககாரர்கள் இதேபோல்தான் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுளள நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Similar News