திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வருகை தரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்க! தலைமுறை காக்க! நடைப்பயணம் மேற்கொள்கிறார் வரவேற்பை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு நடை பயணம் மேற்கொள்ள ஆகஸ்ட் 4 ஆம் தேதி வருகை தரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்க தலைமுறை காக்க பல்வேறு கோரிக்கைகளை குறித்து நடைப்பயணம் மேற்கொள்கிறார் இந்நிலையில் வாணியம்பாடிக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வருகை தரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பை குறித்து இன்று வாணியம்பாடி பெருமாள் பேட்டை கட்சி அலுவலகத்தில் வாணியம்பாடி பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இந்தகூட்டத்தில் வரவேற்பை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன வருகின்ற 4 ஆம் தேதி உரிமை மீட்க தலைமுறை காக்க அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் தொடங்கி சிஎல்.சாலை வழியாக பேருந்துநிலையம் வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார் வாணியம்பாடி ஆம்பூர் மற்றும் ஆலங்காயம் பகுதியில் உள்ள நகரம். ஒன்றியம் பேரூராட்சி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலை பொறுப்பாளர்கள். கிளை நிருவாகிகள். கிளை பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் மிகுந்த பலத்த வரவேற்பு தர இதில் சுமார் இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கட்சியினர் திரட்ட வேண்டும் கிராமம் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அன்புமணியின் செயல்பாடுகளை குறித்து துண்டு பிரசுரம் வழங்கி எடுத்துரைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் நகர தலைவர் வெங்கடேசன். நகர செயலாளர் கொப்பால் மாவட்ட தலைவர் ஆதி குமரவேல் மாவட்ட மாணவரணி செயலாளர் கலை வேந்தன், வனியர் சங்க மாவட்ட செயலாளர் செங்குட்டுவன்,தலைவர் ரவி மற்றும் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்