ஆழியாறு அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் தடை நீட்டிப்பு !

ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-07-27 08:30 GMT
ஆழியாறு அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,763 கன அடி நீர் வந்தது. இதே அளவு நீர் 11 மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. பின்னர் மதியம் 1 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,677 கன அடியாக உயர்ந்ததால், 2,518 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 11 மதகுகள் வழியாக திறக்கப்பட்ட நீர் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு, நுழைவு வாயில் மூடப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு நடத்தி வருகின்றனர்.

Similar News