கோவை: மத நல்லிணக்க திருமண விழா !

கோவை கோட்டை மக்கள் நல்வாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில், போத்தனூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருச்சி, திருப்பூர், கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த ஆறு இஸ்லாமிய ஜோடிகளுக்கு மத நல்லிணக்க முறையில் திருமணம் நடைபெற்றது.;

Update: 2025-07-27 08:41 GMT
கோவை கோட்டை மக்கள் நல்வாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில், போத்தனூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருச்சி, திருப்பூர், கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த ஆறு இஸ்லாமிய ஜோடிகளுக்கு மத நல்லிணக்க முறையில் திருமணம் நடைபெற்றது. இவ்விழாவில் இஸ்லாமிய காஜி அப்துல் ரஹீம், ஹிந்துப் பண்டிதர் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், கிறிஸ்தவ பாதிரியர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு 16 கிராம் தங்கம், கைக்கடிகாரம், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல பரிசுகள் இலவசமாக வழங்கப்பட்டது. 2500 பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மேயர், திமுக நிர்வாகிகள், ஜமாத்தார் மற்றும் அனைத்து மத சான்றோர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Similar News