கோவையில் விலை உயர்ந்த பைக் திருட்டு: பரபரப்பை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்

விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை கொள்ளை கும்பல் நேற்று திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-07-27 08:43 GMT
கோவை ஒண்டிப்புதூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை கொள்ளை கும்பல் நேற்று திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரின் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை, நள்ளிரவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் Handle Bar-ஐ உடைத்து சிறிது நொடிகளில் திருடிச் சென்றது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News