ஓசூர்: ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரி.
ஓசூர்: ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதை வழியாக நாள்தோறும் டூவீலர்கள், கனரக என நுற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று அந்த வழியாக சரக்குகளை ஏற்றி வந்த லாரி சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்றது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் போக முடியாமல் அவதிபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஒசூர் நகர போலீசார் வந்த லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்தை சீர் செய்தனர்.