ராமநாதபுரம் ராமநாதசுவாமி தேரோட்டம் நடைபெற்றது
ராமேஸ்வரத்தில் ஆடித் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் 30ந் தேதி ஆடி திருக்கல்யாணம் நடைபெறும்;
ராமநாதபுரம் மாவட்டம்ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தவர் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணிய திருத்தலம் காசிக்கு நிகரானது. கடந்த 19ந் தேதி கொடியேற்றத்துடன் ஆடி திருவிழா துவங்கியது. 17 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான இன்று கன்னிலக்கனத்தில் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் ரதத்தில் எழுந்தருளினார். பின் உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்கத்தர்கள் இராம..இராம, சிவ சிவ, சிவ சிவ என பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.அம்பாள் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான வரும் 29ந் தேதி தபசு மண்டகப்படியும் வரும் 30 ந் தேதி அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளுக்கும்-அருள்மிகு ராமநாதசுவாமி க்கும் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து, வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பல ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் வர உள்ளனர். இதற்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்திருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.