ஆம்பூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

ஆம்பூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.;

Update: 2025-07-28 10:53 GMT
ஆம்பூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம்.ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் காரில் ஆம்பூருக்கு வந்து பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்த போது, ஆம்பூர் பேர்ணாம்பட்டு செல்லும் புறவழிச்சாலையில் விஸ்வநாதனின் காரின் முன்பக்கம் புகை வந்துள்ளது, உடனடியாக விஸ்வநாதன் காரில் இருந்து வெளியேறிய நிலையில் காரின் முன்பக்கம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது, அங்கிருந்த பொதுமக்கள், காரில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றுள்ளனர், இருந்தபோதிலும் கார் மளமளவென எரிந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர், இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

Similar News