நாட்றம்பள்ளி அருகே பால் வியாபாரியிடம் இரண்டு லட்ச ரூபாய் கொள்ளை போலீசார் விசாரணை!
நாட்றம்பள்ளி அருகே பால் வியாபாரியிடம் இரண்டு லட்ச ரூபாய் கொள்ளை! போலீசார் விசாரணை!;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஸ்னாக்ஸ் வாங்க சென்ற பால் வியாபாரியின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தை நான்கு பேர் கொண்ட கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு 70 வாடிக்கையாளர்களின் பணம் எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என பால் வியாபாரி கோரிக்கை* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியை சார்ந்தவர் சேட்டு என்பவரின் மகன் சக்திவேல் சுமார் பத்து வருடங்களாக 70க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, மொத்தமாக பால் கொள்முதல் செய்து ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பால் கொள்முதல் செய்ததற்கான பணத்தை வழங்கி வருகிறார் இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி பால் கொள்முதல் செய்ததற்கான பணத்தை தனியார் பால் நிறுவனத்தின் மூலம் சக்திவேல் என்பவருக்கு நாட்றம்பள்ளியில் உள்ள தனியார் வங்கி கணக்கில் ரூ.2.20 லட்சம் செலுத்தியதாக தெரிகிறது. இந்தத் தொகையினை சக்திவேல் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்க சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்த பணத்தை பார்த்தபோது பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் மீண்டும் வங்கிக்கும்,சூப்பர் மார்க்கெட் கடைக்கும் சென்று தேடி பார்த்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சியை பார்த்துள்ளார். முதலாவதாக சூப்பர் மார்க்கெட் கடையில் சிசிடிவி காட்சி பார்த்தபோது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடையின் அருகே நின்று 2 பேர் கண்காணிப்பதும், இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை திருடுவதும் பதிவாகி இருந்தது. இதை அடுத்து வங்கிக்கு சென்ற சக்திவேல் அங்கிருந்த சிசிடிவி காட்சியை பார்த்ததில் வங்கிக்கு செல்வதையும், பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வருவதையும் 4 பேர் கொண்ட கும்பல் கண்காணித்து பின் தொடர்வதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. இதில் இரண்டு காட்சிகளையும் பார்த்ததில் பணத்தை திருடி சென்ற நபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த சக்திவேல் சிசிடிவி காட்சி பதிவுகளோடு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்பொழுது பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில் உற்பத்தியாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காத சக்திவேல் இடம் பால் ஊற்றும் 70 நபர்கள் பணத்தைக் கேட்டு வற்புறுத்துவதால் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை எப்படியாவது கைது செய்து பணத்தைப் பெற்று தர தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேல் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது