நாட்றம்பள்ளி அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை

நாட்றம்பள்ளி அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை;

Update: 2025-07-28 11:00 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே வாலிபர் ஒருவர் அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் தவறி விழுந்து உடல் சிதறி இறந்து கிடந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியாத நிலையில் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் ரயிலில் இருந்து கீழே விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற கோணத்திலும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Similar News