பரபரப்பான முக்கிய சாலையில் திடீர் தீ விபத்து

வத்தலக்குண்டில் காளியம்மன் கோவில் அருகே பரபரப்பான முக்கிய சாலையில் திடீர் தீ விபத்து தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் பொருள் சேதம் தவிர்ப்பு;

Update: 2025-07-28 11:23 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே வணிக வளாக குடோனில் வைக்கப்பட்டிருந்த காலி அட்டைப் பெட்டிகளில் திடீரென தீ பிடித்தது அட்டைப் பெட்டிகள் என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது தகவல் அறிந்து உடனடியாக நிகழ்வு இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீ வணிகவளாகத்தில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவாமல் உடனடியாக தடுத்தனர் தீயணைப்பு விரர்களின் துரித நடவடிக்கையால் நல்வாய்ப்பாக பெரும் பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது தீ விபத்தைத் தொடர்ந்து முக்கிய சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன இதனால் வத்தலக்குண்டு பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தீ விபத்து காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News