பேருந்து நிலையம் மாறுதலை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நகராட்சியில் மனு..
பேருந்து நிலையம் மாறுதலை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நகராட்சியில் மனு..;
இராசிபுரம் பேருந்துநிலைய மீட்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பேருந்து நிலையம் மாறுதலை ஆட்சேபித்து தொடரப்பட்ட எண் W.P.NO.38971/2024 வழக்கில் 06/03/25 அன்று வழங்கபட்ட உத்திரவில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்களையும் நேரடிவிசாரணை செய்தும் பொதுமக்களிடைய பொது கருத்தை கேட்டு தகுந்த உத்திரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஏதேனும் சட்டவிரோதம் நடந்திருந்தால், மாவட்ட ஆட்சியர் யாரையும் விட்டுவைக்கக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் 25/07/25 அன்று பொது அறிவிப்பை வெளியிட்டு நாளிதழ்களில் செய்தி வந்தது.ஆனால் நகராட்சி ஆணையாளர் 21/07/25 ந்தேதியே பொது அறிவிப்பை வெளியிட்டதாக அறிவிப்பில் உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுஅளித்து நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டபது போல் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த ஐந்து வேலை நாட்கள் கருத்து கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் 28/07/25 நாளிலிருந்து வருகிற 1/08/25 வெள்ளிக்கிழமை வரை பொது மக்களிடம் ஆட்சேபனை மனு பெறவேண்டும் என்று கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டிருக்கிறார். இதன் அடிப்படையில் இன்று ஆயிக்கணக்கில் மக்கள் திரண்டு பேருந்து நிலையம் மாற்றுவதை எதிர்த்து மனு கொடுத்துள்ளனர். இராசிபுரம் பேருந்து நிலைய கூட்டமைப்பினர் இன்று மனு அளித்தனர்.மேலும் வருகின்ற 01/8/25 வரை பொது மக்கள் ஆட்சேபனை செய்து மனு அளித்து இராசிபுரம் பேருந்து நிலையத்தை பாதுகாப்போம் என்று கேட்டுக்கொள்கிறோம்.