மதுபான கடையை அகற்ற கோரி மனு
மாரண்டஅள்ளி சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி சர்வதேச மனித உரிமை கழகம் சார்பில் கலெக்டரிடம் மனு;
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதி பொன்முடி தியேட்டர் எதிரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இப்பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதுடன் அதிக மக்கள் கூடும் பகுதியாகவும் உள்ளது. இவ் வழியாக பள்ளி பேருந்துகள் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பல ஊர்களுக்கும் கடந்து செல்கின்றனர். இப்பகுதியில் மதுக்கடைக்கு வரும் மது பிரியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, வெள்ளிச்சந்தை, செல்லும் முக்கிய சாலையிலேயே குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. அதுமட்டுமின்றி மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக சாலையின் ஓரத்திலேயே அமர்ந்து மது அருந்திவிட்டு பல தீய செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதனால் இப்பகுதியில் உள்ள மது கடையை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கழகம் சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் சதீஸ், மனு அளித்தனர் பின்னர் இக்கடையை முற்றிலும் அகற்ற வேண்டும் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட முக்கிய நகரப் பகுதிகளில் இடையூறாக உள்ள டாஸ்மாக் மது கடைகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் இந்த கடையை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.