தர்மபுரி கோட்டை பெருமாள் கோயிலில் ஆடி பூரம் விழா
தர்மபுரி கோட்டை வரமஹாலஷ்மி சமேத பரவாசுதேவ பெருமாள் திருக்கோவிலில் ஆடி பூரம் விழா;
தர்மபுரி நகர், கோட்டை அருள்மிகு ஸ்ரீ வரமஹாலஷ்மி சமேத பரவாசுதேவ பெருமாள் திருக்கோவிலில் திருஆடிப்பூர விழா நேற்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்க்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் பஞ்சாமிர்தம் மஞ்சள் குங்குமம் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகளும் திருஆடிப்பூர விழாவும் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்று ஸ்ரீ ஆண்டாளுக்கு மஞ்சள் குங்குமம், வளையல், தாலி சரடு மற்றும் புஷ்பம் படைத்து வழிபட்டனர். தொடர்ந்துவரலஷ்மி விரதம் பூஜை நடைபெற்றது. தொழிலதிபர் அக்ஷயா முருகன் பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கினார் ஏரளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கோயில் அர்ச்சகர் பிரசாத் மற்றும் பக்தர்கள் பெண்கள் ஆடி பூரம் விழா கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு .அன்னதான வழங்கப்பட்டது