தனியார் பேருந்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
சோமனஹள்ளி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற தனியார் பேருந்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்;
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளியில் தனியார் பேருந்துகள் புதிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்த பிறகு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், நேற்று நள்ளிரவு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவ்வழியே வந்த தனியார் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பாலக்கோடு காவல் துறை சமூகத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு போராட்டம் கைவிடப்பட்டது