மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-07-29 08:29 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.07.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 252 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இன்றைய கூட்டத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பணியிடத்து விபத்து மரணம் உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ.40.80 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், திண்டுக்கல் மாநகரத்திற்கு நக்க்ஷா திட்டத்தின் மூலம் ட்ரோன் மற்றும் நவீன நில அளவை கருவிகள் கொண்டு நகரளவை பணி செய்வதற்கு 30 நவீன நில அளவை கருவிகள் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து திட்ட பணி செயல்பாட்டிற்காக நவீன கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நில அளவைத்துறை அலுவலர்களிடம் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) செந்தில்வேல், உதவி இயக்குநர் (நில அளவை) சிவக்குமார் கலந்துகொண்டனர்.

Similar News