ஜோலார்பேட்டையில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது..

ஜோலார்பேட்டையில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது..;

Update: 2025-07-29 11:37 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் அங்கக வேளாண்மை குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.. திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தின் கீழ் 12 தனிநபர் விவசாயிகள் சுமார் 95.2 ஹெக்டர் பரப்பளவில் உயிர்ம விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் 2025-26 ஆம் நிதி ஆண்டில் 150 ஹெக்டர் பரப்பளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாதனை அடைய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா pkvy திட்டத்தின் கீழ் ஆறு வட்டாரங்களிலும் 20 தொகுப்புக்கள் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு இயற்கை விவசாயம் செய்வதற்கான இடுப்பொருட்கள் மானியம் , பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொகுப்புக்கள் அல்லாத தனிநபர் இயற்கை விவசாயிகளுக்கும் பின்னேற்பு மானியம் மற்றும் உரிய சான்றிதழ்களும் விதை சான்று துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பங்களிப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் 20 குழுக்கள் உருவாக்கப்பட்டு 539.49 ஹெக்டேர் பரப்பளவில் உயிர்ம விவசாயம் மேற்கொள்ளப்பட்டு 486 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விஞ்ஞானிகள் உடனான இந்நிகழ்ச்சியை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு இயற்கை விவசாயம் செய்து மாவட்டத்தின் முன்னேற்றத்திலும் பங்குபெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.... அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் வேலூர் விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்று அங்கக வேளாண்மை குறித்த செயல்முறை விளக்கம் அளித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா, வேளாண் அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கு பெற்றனர்.

Similar News