தேவகோட்டையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
தேவகோட்டையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 10,12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேவகோட்டை அளவில் முதலிடம் பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக முன்னாள் நகர்மன்ற தலைவர் வெள்ளையன் செட்டியார் நினைவாக ரொக்க பரிசும்,கேடயமும் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்