தேவகோட்டையில் பில்லி பொங்கல் - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

தேவகோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைக்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது;

Update: 2025-07-29 12:19 GMT
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, காவல் தெய்வம் கோட்டை அம்மன் கோவிலில் ஜூலை - 21ம் தேதி காப்பு கட்டுடன் விழா தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. தினந்தோறும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இன்று முக்கிய நிகழ்வான பில்லி பொங்கல் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதலில் கோவில் பானைக்கு பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். உள்ளூர் மற்றும் வெளி ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து மாவிளக்கு வைத்து பிரார்த்தனைகளை வேண்டிக்கொண்டு வழிபட்டனர்

Similar News