அரசு துவக்கபள்ளியில் இணைந்து கல்வி கற்கும் நிலை
தாடிக்கொம்பு அரசு துவக்க பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம், ஆங்கில வழி கல்விக்கான 2 ஆசிரியர்கள் பணியிடமும் காலி - தமிழ் வழி கல்வியோடு ஆங்கில வழி கல்வி மாணவர்களும் இணைந்து கல்வி கற்கும் நிலை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? பெற்றோர்கள் கேள்வி;
திண்டுக்கல் தாடிக்கொம்பு அரசு துவக்க பள்ளியில் 237 மாணவர்கள் படித்து வரும் நிலையில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது மேலும் ஆங்கில வழிக் கல்வியில் முதல் இரண்டு வகுப்புகளுக்கு ஆங்கில வழி கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஆங்கில வழி கல்விக்கு ஆசிரியரே இல்லாத நிலையில் தமிழ் வழி கல்வியோடு இணைத்து பாடம் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக ஆங்கில வழி மாணவர்கள் பாதிக்கின்றனர். 5 ஆசிரியர்கள் உள்ள இங்கு வாரத்தின் முதல் நாளான நேற்று 3 ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றதால் மற்ற வகுப்புகளை மீதமுள்ள இரு ஆசிரியர்களே கவனிக்கும் நிலை ஏற்பட்டது இது போன்ற நிலை அடிக்கடி நடப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு பள்ளியை முறையாக நடத்த வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.