ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தை அணைப்பாளையம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்து, மக்கள் நலக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று நகராட்சியில் மனு..

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தை அணைப்பாளையம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்து, மக்கள் நலக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று நகராட்சியில் மனு..;

Update: 2025-07-29 13:05 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தற்போது செயல்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், சுமார் 8 கிமீ சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அணைப்பாளையம் கிராமத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தொடக்கத்தில் இருந்து, அதிமுக கம்யூ, மதிமுக, தேமுதிக, பா.ஜ,க, தமிழக தன்னுரிமை கட்சி ,வணிகர் சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்பினர், மக்கள் நலக்குழுவினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராசிபுரம் பஸ் நிலையம் மீட்பு குழுவினர் என்ற பெயரில், கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஸ் நிலையத்தை மாற்றக்கூடாது என, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாவட்ட கலெக்டரின் நேரடி விசாரணைக்கு பின், பொதுமக்கள் ஆட்சேபனை அல்லது கருத்து வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது ராசிபுரம் நகராட்சி அலுவலகத்திலோ கொடுக்கலாம் என ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது மனுக்களை நகராட்சி நிர்வாகத்திடம் அளித்தனர். அதில், ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தை அணைப்பாளையம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டுமென கோரி இருந்தனர். இந்நிலையில் மக்கள் நலக்குழுவினர் மனுக்கள் வழங்க நகராட்சியில் வந்தபோது அங்கு ஆணையாளர் இல்லை இதனால் மக்கள் நலக்குழுவினர் மற்றும் நிர்வாகிகள் ஏன் ஆணையாளர் இங்கு வரவில்லை எனக் கூறி வாக்குவாதம் செய்தனர், மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டும் இதற்கு முறையாக மனுக்கள் பெறவில்லை என குற்றம் சாட்டினர். பொறியாளர் நீங்கள் மனுக்கள் பெறுவது சரியா இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை உங்களால் எடுக்க முடியுமா என தொடர்ந்து அதிகாரியிடத்தில் மக்கள் நலக்குழு நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். இதனால் சிறிது நேரம் நகராட்சியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது..

Similar News