மாமியாரை தாக்கிய மருமகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..
மாமியாரை தாக்கிய மருமகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த கணவன் மனைவி, கணவருக்கு மாமியார் உறுதுணையாக இருப்பதாக வீட்டுக்குள் நுழைந்து மாமியாரை தாக்கிய மருமகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மனைவி தெய்வானை இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், தெய்வானை சமூக வலைதளங்கள் மற்றும் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதாகவும் குடும்பத்தை சரியாக கவனிப்பதில்லையெனக்கூறி அவரது கணவர் செல்வம் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் செல்வத்திற்கு அவரது தாயார் மாணிக்கம்மாள் உறுதுணையாக செயல்படுவதாக கூறி தெய்வானை செல்வம் வீட்டிற்கு சென்று தாய் மாணிக்கம்மாளை சரமாரியாக தாக்கி தலைமுடியை பிடித்து சண்டையிட்டுள்ளார், இதுகுறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் செல்போனில் அதிக நேரம் செலவிடும், மனைவியை பிரிய விவாகரத்து கோரிய கணவனின் தாயாரை மருமகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது