ஒசூா் அருகே புகையிலை பொருள்கள் கடத்திய டிரைவருக்கு காப்பு.
ஒசூா் அருகே புகையிலை பொருள்கள் கடத்திய டிரைவருக்கு காப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரிலிருந்து ஒசூருக்கு வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அந்த காருக்குள் 202 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் 36 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தன. இதை அடுத்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் குட்காவை சேலத்திற்கு கடத்த இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து கார் ஓட்டுநா் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த கணபத் சிங் (33) என்பவரை கைது செய்தனா்.