இடங்கணசாலை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பொதுமக்கள் பங்கேற்பு;

Update: 2025-07-30 04:02 GMT
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இ.காட்டூர், மடத்தூர், வளையச்செட்டிபட்டி, கோனேரிப்பட்டி உள்பட 9, 11, 12 ஆகிய வார்டு பகுதிகளுக்கு 2-ம் கட்டமாக நடைபெற்றது. இந்த முகாமில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் லோகநாயகி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமில் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, பட்டா, விவசாய உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளித்தனர். இதில் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் குறைவான போலீசார் பணியில் இருந்து வருவதால், பொதுமக்களின் பிரச்சினைகளை அவ்வப்போது தீர்க்க முடியாமல் இருந்து வருகிறது. எனவே அந்த போலீஸ் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை நியமனம் செய்ய கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், நகர செயலாளர் செல்வம், நகராட்சி துணை தலைவர் தளபதி, சங்ககிரி தாசில்தார் வாசுகி, நகராட்சி ஆணையாளர் பவித்ரா மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News