புதிய சமுதாய கூடம் கட்ட ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை:
கபிலக்குறிச்சி ஊராட்சி வேட்டுவம்பாளையத்தில் புதிய சமுதாய கூடம் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டீல் கட்ட பூமி பூஜை.;
பரமத்தி வேலூர்,டிச:6 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி வேட்டுவம்பாளையம் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இப் பூமிபூஜை விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகழக பொறுப்பாளர் கே .எஸ்.மூர்த்தி தலைமையேற்று ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் . நிகழ்ச்சியில் கபிலர்மலை மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் வக்கீல் சரவணக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜன், கபிலர்மலை அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ,மாவட்ட, ஒன்றிய ,கிளைக் கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் ,மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.