நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் அம்மாவுக்கு நினைவஞ்சலி...
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் அம்மாவுக்கு நினைவஞ்சலி...;
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை உத்தரவின் பெயரில் அனைத்து பகுதிகளிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் மங்களபுரம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் இ. கே பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் பொன். அரவிந்தன், ஈரோடு மண்டல இணைச் செயலாளர் அம்மா பேரவை, மற்றும் ஒன்றியத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். ஏ. சுப்பிரமணியன், மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..