பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.;
பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் கருப்பு கொடி ஏந்தி 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் இருபால் இஸ்லாமியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ,சிறப்பு வாக்காளர் பட்டியல் சீராய்வு பணியை கைவிட வேண்டும். வஃக்பு திருத்த சட்டம் 2025 என்ற திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், வழிபாட்டுத்தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.