ஹோட்டல் உரிமையாளரை விரட்டி, விரட்டி வெட்டிய நபர்கள்

மானாமதுரையில் ஹோட்டல் உரிமையாளரை வெட்டிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்;

Update: 2025-07-30 05:36 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பைபாஸ் ரோட்டில் முகமது இக்ராம் முல்லா என்பவரின் மகன் முகமது யாகூப் சேட் என்பவர் இரவு நேர ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இரவு நேர ஹோட்டலில் பிரைட் ரைஸ் போட்டுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் வந்து முகமது யாகூப் சேட்டிடம் பிரச்சனை செய்ததாகவும், திடீரென்று அவரை விரட்டி, விரட்டி வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் முகத்தில் பல்வேறு வெட்டுகள் விழுந்ததில் உடனடியாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை மதுரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News