ஓசூரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மேயர்.

ஓசூரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மேயர்.;

Update: 2025-07-30 08:34 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 41-வது வார்டுக்குப்பட்ட ராயக்கோட்டை அட்கோ பகுதியில் தனியார் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஓசூர் மேயர் சத்யா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மனிதவளத்துறை பொது மேளாளர் அதிசயகுமார் மற்றும் நிறுவன பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News