ராமநாதபுரம் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
நயினார் கோவில் அருகே பாலியல் குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது;
ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் காவல்நிலைய பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முருகன் என்பவர் மீது நயினார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஐ.பி. எஸ் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முருகனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.