பல்லடம் அருகே பட்டா கோரி பொதுமக்கள் போராட்டம்
30 ஆண்டுகளாக தவிக்கிறோம் பல்லடம் அருகே பட்டா கோரி பொதுமக்கள் போராட்டம்;
30 ஆண்டுகளாக தவிக்கிறோம் பல்லடம் அருகே பட்டா கோரி பொதுமக்கள் போராட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென்னம்பாளையம் பகுதியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தால் இப்பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்களை குடி அமர்த்தினர் இந்நிலையில் இன்று வரை அதற்கான பட்டா வழங்கப்படவில்லை 30 ஆண்டுகளாக இதுவரை கிடைக்க பெறாமல் இவர்கள் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அறிவொளி நகர் பகுதியில் பொதுமக்கள் பந்தல் அமைத்து கவன ஈர்ப்பு போராட்டமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அரசு கவனம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்