கிருஷ்ணகிரி: கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்.
கிருஷ்ணகிரி: கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணா அவரது மனைவி ரேணுகா இருவரும் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மின் கசிவு காரணமாக இருவரும் உயிரிழந்து விட்டனர்.எனவே கருணை அடிப்படையில் அவர்களுடைய மகள் ஹர்சிதா அவர்களுக்கு தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி இயக்குபவர் பணியை உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி பணி நியமன ஆணையை வழங்கினார்.இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், எம்எல்ஏக்கள் ஓசூர் ஒய். பிரகாஷ், மற்றும பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.